Site icon Vivasayam | விவசாயம்

பணம் குவிக்கும் பூங்கொத்து தொழில்

காதலன், காதலிக்கும், காதலி காதலனுக்கும், அன்பு தங்கை பிறந்தநாளுக்கு அண்ணனும், அண்ணனின் பிறந்தநாளுக்கு தங்கையும், திருமணங்களிலும் பூங்கொத்துகளை மகிழ்ச்சியுடன் பரிமாறிக் கொள்ளும் வழக்கம் தற்போது அதிகரித்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பெல்லாம் பொக்கே எனப்படும் பூங்கொத்துகளை கொடுக்கும் வழக்கம் பெரும்பாலும் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய பழக்கமாக பார்க்கப்பட்டது. 10 ரோஜா பூக்களை கொத்தாக்கி தருவதற்கு அநியாயமாக விலை சொல்கிறார்களே என்று மாய்ந்து மாய்ந்து பேசியவர்களின் எண்ணம் இப்போது மாறிவிட்டது.

நமக்கு பிடித்தவர்களுக்கு எந்த வகை பூக்கள் பிடிக்கும்? குறிப்பாக என்ன நிறங்களில் உள்ள பூக்கள் பிடிக்கும்? அவற்றை ஒழுங்காக நேர்த்தியாக கொடுப்பதில் தானே நமது அன்பு முழுமையாக வெளிப்படும் என்பது போன்ற யோசனைகள் இப்போது மக்களிடம் அதிகரித்துள்ளது. அதன் விளைவாக இந்த நிறத்தில் இந்த வகையான பூக்களை கொண்ட பொக்கே வேண்டும் என்று ஆர்டர் செய்யும் கஸ்டமர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

இன்னும் சில பேர் வாழ்த்து அட்டைகளை தேர்ந்தெடுப்பது போல், மலர்களை தேர்ந்தெடுத்துக் கொள்வதும் உண்டு. அந்த அளவுக்கு பொக்கே விஷயத்தில் மக்களின் ரசனை அதிகரித்துள்ளது.

ஒரு டஜன் ரோஜாக்கள் அடங்கிய ஹேண்ட் பன்ச் 100 ரூபாய். பேப்பர் சார்ட் பொக்கே குறைந்த பட்சம் ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் வரை செய்யப்படுகிறது. பூக்கூடை வடிவிலான பொக்கோக்கள் ரூ.200-ல் இருந்து 10 ஆயிரம் வரை ரூபாய் வரை கூடை மற்றும் பூக்களின் தரத்திற்கு தகுந்தவாறு விலை கூடிக்கொண்டே போகும். இப்படி நல்ல வருமானத்தை ஈட்டித்தரும் பூத்தொழிலை மேற்கொண்டல் பணம் குவியும்.

Exit mobile version