Site icon Vivasayam | விவசாயம்

இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலில் 268 உதவியாளர் பணியிடங்கள்

இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் டெல்லி தலைமை அலுவலகம் மற்றும் ஆராய்ச்சி கிளை நிறுவனங்களில் காலியாக உள்ள 268 உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க வேளாண் அறிவியல் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மொத்த இடங்கள்:

268. இதில் இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் டெல்லி தலைமை அலுவலகத்தில் 46 இடங்களும், ஆராய்ச்சி கிளை நிறுவனங்களில் 222 இடங்களும் உள்ளன.

1. டெல்லி தலைமை அலுவலகத்தில் உதவியாளர்:

46 இடங்கள் (பொது – 21, எஸ்சி – 10, எஸ்டி – 4, ஒபிசி – 11). இதில் ஒரு இடம் மாற்றுத்திறனாளிக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சம்பளம்: 

ரூ.9,300 – 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

2. விவசாய ஆராய்ச்சி கவுன்சில் கிளைகளில் உதவியாளர்:

222 இடங்கள் (பொது – 130, எஸ்சி – 27, எஸ்டி – 15, ஒபிசி – 50). இதில் 4 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

வயது:

01.08.2014 அன்று 20 முதல் 27க்குள்.

தகுதி:

ஏதேனும் ஒரு பட்டம்.

விண்ணப்ப கட்டணம்: 

ரூ.1000. இதை நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம் அல்லது சிண்டிகேட் வங்கியின் ஏதேனும் ஒரு கிளையில் இதற்காக வழங்கப்படும் செலான் மூலம் செலுத்தலாம். பெண்கள், எஸ்சி., எஸ்டியினர் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

முதல்நிலை தேர்வு, பிரதான தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். முதல்நிலைத் தேர்வு ஆன்லைன் தேர்வாக நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பிரதான தேர்வு நடத்தப்படும். மேலும் விவரங்களுக்கு http://www.asrb.org.in அல்லது http://www.icar.org.in ஆகிய இணையதளங்களை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.9.2014. 

நன்றி

தினகரன்

Exit mobile version