Site icon Vivasayam | விவசாயம்

லாபம் கொழிக்கும் தேங்காய் வியாபாரம்

சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், மல்லூர், மேட்டூர், மேச்சேரி, ஓமலூர், தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் தென்னைமரங்கள் அதிகளவில் உள்ளன. கிணறு மற்றும் வாய்க்கால், வயல்வெளி வரப்பு ஓரங்களில் தென்னை பயிரிட்டு வருகின்றனர். நீண்டகாலம் பலன் தரும் பணப்பயிராக தென்னை இருப்பதால் விவசாயிகள் ஆர்வத்துடன் பராமரித்து வருகின்றனர்.

இங்கு விளையும் தேங்காய்கள் ருசி மிகுந்து காணப்படுவதோடு, நீண்ட நாட்களுக்கு இருப்பு வைத்திருந்தாலும் கெடாத தன்மை பெற்றுள்ளது. இதனால், விவசாயிகளிடம் ஆண்டு குத்தகை முறையிலும் எண்ணிக்கை அடிப்படையிலும் தேங்காய்களை கொள்முதல் செய்யும் தனியார் தேங்காய் மண்டி அதிபர்களும், சிறு வியாபாரிகளும் கூலி தொழிலாளர்களை கொண்டு மட்டைகளை உரிக்கின்றனர். இதன் மூலம் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

தேங்காய் மட்டை உரிக்கப்பட்ட தேங்காய்களை தரம் பிரித்து, முதல் தர தேங்காய்களை ஆண்டு முழுவதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமின்றி ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், பீஹார், மஹாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கும், ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பி வருகின்றனர்.

நன்றி

தமிழ் முரசு

Exit mobile version