Site icon Vivasayam | விவசாயம்

மூவிலைக் கரைசல்!

                            வேப்பிலை, ஊமத்தை இலை, எருக்கன் இலை என இம்மூன்று இலைகளும் கைக்கு எட்டும் தூரத்துக்குள்ளாகவே கிடைக்கக் கூடிய இலைகள். இவை மூன்றையும் தலா 10 கிலோ அளவில் பறித்துவந்து, அவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றப்பட்ட தொட்டியில் சேர்த்து ஊறவைக்க வேண்டும். தொட்டி நிழலில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது நல்லது.

            தினமும் ஒரு முறை இதைக் கலக்கிவிட்டு வந்தால்… ஐந்தாம் நாள், அடர் பச்சை நிறத்தில் தொட்டி தண்ணீர் மாறியிருக்கும். இந்தக் கரைசலை வடிகட்டி, சொட்டுநீர் பிரதானக் குழாயில் பொருத்தப்பட்டுள்ள வெஞ்சர் கருவி மூலம் செலுத்தி, பட்டாம்பூச்சிக் கருவி மூலமாக பாசனம் செய்ய வேண்டும். இந்த மூவிலைக் கரைசல், பூச்செடிகளைத் தாக்கும் அனைத்துப் பூச்சிகளையும் விரட்டி அடிப்பதுடன், வேர்அழுகல் நோய் வராமலும் தடுக்கும். மாதம் இரு முறை இந்த மூவிலைக் கரைசலைக் கொடுக்கலாம். இதை, காலை அல்லது மாலை வேளைகளில், மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

                                                                                                             நன்றி

                                                                                                    பசுமை விகடன்

Exit mobile version