Site icon Vivasayam | விவசாயம்

மழைக்கால நோய்களும் தீர்வுகளும்!

மடி வீக்கம்: கறந்த பால், வெள்ளை நிறத்தில் இல்லையென்றால், மாட்டுக்கு மடியில் ஏதோ பாதிப்பு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் மடி வீக்கமாக இருக்கும். காம்புகளில் வெடிப்பு இருக்கும். காம்பையோ, மடியையோ தொட்டால் உதைக்கும். இது மடிவீக்க நோய்க்கான அறிகுறி. 250 கிராம் சோற்றுக் கற்றாழையைத் துண்டு துண்டாக நறுக்கி, மிக்ஸி அல்லது உரலில் இட்டு, 50 கிராம் மஞ்சள் தூள், கொட்டைப்பாக்கு அளவில் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்தால்… சிவந்த நிறத்திலான கலவை கிடைக்கும். மாட்டின் மடியை வெதுவெதுப்பான சுடு தண்ணீரில் நன்றாகக் கழுவிவிட்டு, காம்பிலிருந்து சிந்தும் அளவு பாலைக் கறந்து விட வேண்டும். அரைத்தக் கலவையோடு, சிறிதளவு தண்ணீர் கலந்து மடி, காம்பு முழுவதிலும் நன்றாகப் பூச வேண்டும். ஒரு நாளைக்கு 10 முறை இது போல செய்தால்… மடி வீக்கம் மறைந்து விடும்.

கழிச்சல்: தலா 15 கிராம் சீரகம், வெந்தயம், கசகசா, 5 கிராம் பெருங்காயம், 5 எண்ணிக்கையில் மிளகு ஆகியவற்றை, வாணலியில் கருகும் வரை வறுத்து, ஆறவைத்து மிக்ஸி அல்லது அம்மியில் அரைக்க வேண்டும். அதோடு, 5 கிராம் மஞ்சள், 10 பல் சின்ன வெங்காயம், 6 பூல் பூண்டு, 200 கிராம் புளி, 250 கிராம்  வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து…. இக்கலவையை கல் உப்பில் கலந்து, வாய் வழியாக கொடுத்து வந்தால், கழிச்சல் நோய் காணாமல் போய் விடும்.

Exit mobile version