Site icon Vivasayam | விவசாயம்

தெம்பு தரும் தேங்காய் தண்ணீர்!

          பூக்கள் ஒரே சீராகவும், அதேசமயம் பெரியதாகவும் வளர்ந்து இருந்தால்தான் நல்ல விலை கிடைக்கும். இதற்கு தேங்காய் தண்ணீர் வைத்தியம் கை கொடுக்கும். முற்றிய தேங்காயின் தண்ணீர் 50 லிட்டர் அளவு எடுத்துக் கொண்டு, மாதம் இரண்டு தடவை தெளிப்புநீர் வழியே செடிகள் நன்றாக நனையும்படி கொடுக்க வேண்டும். இதிலுள்ள இனிப்புத் தன்மை, தேனீக்களை அதிக அளவில் செடிகளின் பக்கம் ஈர்த்து, அயல் மகரந்தச் சேர்க்கையை ஏற்படுத்துவதால், அழகான பெரிய பூக்கள் கிடைக்கின்றன.

      கொப்பரை உற்பத்தி செய்யும் உலர்களங்கள் பிரபலமான கோயில், ஹோட்டல் என்று தேங்காய்கள் பெரிதாகப் பயன்படுத்தப்படும் இடங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டால், தேவையான தேங்காய் தண்ணீரைப் பெற முடியும்.

 

                                                                                                           நன்றி

                                                                                              பசுமை விகடன்

Exit mobile version