Skip to content

இந்தியாவின் மாம்பழ மனிதர்

ஒட்டுக்கட்டுதல் மூலம் ஒரு மரத்தில் இரண்டு வகையான பழங்களை பார்த்திருப்போம். சில இடங்களில் ஐந்து நிற செம்பருத்தி மலர்கள் ஒரே செடியில் பூப்பதை பார்த்திருப்போம். ஆனால் ஒரே மரத்தில் 300 வகையான மா ரகங்களை பார்த்ததுண்டா. ஆம் அப்படி ஒரு மாமரத்தை உருவாக்கியவர்தான் இந்தியாவின் மாம்பழ மனிதர் என்று அழைக்கப்படும் ஹாஜி கலிமுல்லா கான்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் லக்னோ அருகில் உள்ள மல்லிகாபாத் என்ற ஊரில் பிறந்த இவருக்கு தற்போது 80 வயது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவர் தாத்தா உருவாக்கிய 22 ஏக்கர் மாந்தோப்பை தன் மகனுடன் இணைந்து பராமரித்து வருகிறார். தோட்டக்கலையில் இவரது சேவையை பாராட்டி 2008ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்ம ஸ்ரீ விருதை வழங்கியுள்ளது.

15 வயது இருக்கும்போது தன் நண்பரின் தோட்டத்தில் ஒரே செடியில் பூத்திருந்த பல நிறமுடைய ரோஜா பூக்களை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளார். அதுவே அவரை ஒரே செடியில் பல மாங்காய் ரகங்களை ஒருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியது. பிறகு 17வது வயதில் அவருடைய தந்தை தன் தோட்டத்தில் உள்ள ஒரே மரத்தில் 7 மாங்காய் ரகங்களை ஒட்டுக்கட்டி காய்க்கச் செய்துள்ளார். 1987ஆம் ஆண்டு முதல்முறையாக அவரே ஒட்டுக்கட்டுதல் முற்சியையும் மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

1999ஆம் ஆண்டு துபாய், ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்து அங்கிருந்து மா ரகங்களை கொண்டு வந்து ராஸ்தரபதி பவன் அருகில் உள்ள ஒரு முகலாயர் தோட்டத்தில் 54 ரகங்களை ஒரே மாமரத்தில் ஒட்டுக்கட்டியுள்ளார்.

தான் உருவாக்கிய மா ரகங்களுக்கு அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோரின் பெயர்களையும் கோவிட் பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக “டாக்டர் ஆம், போலிஸ் ஆம்” போன்ற பெயர்களையும் வைத்துள்ளார். இவர் உருவாக்கியுள்ள “அனர்கலி” என்ற மா ரகத்திற்கு இரண்டு விதமான தோலும், பழக்கூலும் உள்ளது தனிச்சிறப்புடையது.

ஒரே மரத்தில் இத்தனை ரகங்களை உருவாக்குவது என்பது ஒரு கலையே தவிர இதனால் எந்த பயனும் இல்லை என்று இந்திய மாங்காய் வளர்ப்போர் சங்கத்தின் துணைத்தலைவர் டி.கே. ஷர்மா தெரிவிக்கிறார். ஆனால் இந்திய மாம்பழ மனிதரோ இதனை மறுப்பதோடு மட்டுமல்லாமல் மாங்காய் ஒட்டுக்கட்டுதல் என்பது வனிக ரீதியில் மா மரங்கள் வளர்க்க பயன்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே என்று கூறுகிறார். மேலும் தன் இறப்பிற்கு பின்னால் தன் தோட்டத்தில் உள்ள வேலையாட்களும் அடுத்த தலைமுறையினரும் இந்த மாம்பழங்களை உண்டு பயன்பெறுவர் என்றும் கூறுகிறார்.

இயற்கையின் அழகு என்பது கொடுத்துக்கொண்டி இருப்பதுதான் என்று இந்தியாவின் மாம்பழ மனிதர் உரைத்து கூறுகிறார்.

கட்டுரையாளர்கள்:
1. எ. செந்தமிழ்,
முதுநிலை வேளாண் மாணவர் (உழவியல் துறை),
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் – 608 002.

2. பூ. நந்தினி,
முதுநிலை வேளாண் மாணவி (பயிர் நோயியல் துறை),
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் – 608 002.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

senthamil E

senthamil E

முதுநிலை வேளாண் மாணவர் (உழவியல் துறை), அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் - 608002