Skip to content

வேளாண்மையில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

அறிவியல் மற்றும் பழங்காலத்திலிருந்து பின்பற்றப்படும் செயல்களை ஒருங்கிணைத்து அதை தொழில்நுட்பங்களாக உருவாக்கி, கிராமப்புற பெருகுடிமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய மற்றும் கஷ்டங்களில் இருந்து மீள அங்கு கிடைக்கும் பொருள்களை வைத்தே, ஏற்றுக்கொள்ள கூடிய,பணம் அதிகம் செலவில்லாத, பயனளிக்கக்கூடியதாக வழங்குவதே இந்த தொழில்நுட்பத்தின் நோக்கம்.

நெல்:

கார்த்திகை தீபம் நாளில் நெல் விவசாயிகளுக்கு மழை பெய்ய, மழை நாட்களில், கோயில்களில் சொக்கப் பனை கொலுத்துத்தல் செய்யப்படுகிறது. அதாவது,பனை ஓலைகளை தீ வைத்து சாம்பலை விவசாயிகள் அவரவர் வயலில் இடுவர்.

விதைகளை சாக்கு பைகளில் அடைத்து, கட்டி 24 மணி நேரம் அவற்றை வயலில் ஊற வைக்கவும். அடுத்த நாள் விதைகள் முளைத்து காணப்படும். பின் அவ்விதைகளை விதைக்கவும்.

கதிரடிக்கப்பட்ட நெல் மணிகளை குதிர் அல்லது குளுமையில் சேமிக்கலாம். இது மூன்று அல்லது நான்கு அடுக்குகளாக செய்யப்பட்டு பின் ஒன்று சேர்க்கப்படும். ஒரு குளுமையின் கொள்ளவு 10-15மூட்டைகள் (1மூட்டை=100கிலோ). இதன் அடிப்புறத்தில் நெல் மணிகளை தேவையின் பொழுது எடுக்க நம் கை செல்லும் அளவிற்கு ஒரு ஓட்டை அமைந்திருக்கும். நெல் மணிகளை எடுத்த பின் அந்த ஓட்டையை மண் கலவை கொண்டு அடைத்து விடலாம்.இதில் வைக்கப்பட்ட நெல் மணிகளை அடுத்த புதிய நெல் வரும் வரை சேமிக்கலாம்.

மெச்சு/தேந்தி/பரணில் கதிரடிக்கப்பட்ட நெல் மணிகளை சேமிக்கலாம். தேவையின் பொழுது எடுத்துக் கொள்ளலாம்.

கரும்பு:

பழைய காலங்களில் கிராமங்களுக்கு அருகே அரிதாக சர்க்கரை ஆலை இருக்கும். ஆனால் மக்கள் அதிகம் வெல்லம் தயாரிப்பதையே விரும்புவார்கள். எனவே அறுவடை காலத்தில் சில குடும்பங்கள் கிராமங்களுக்கு கரும்பு சாறு பிழியும் இயந்திரம் (sugarcane crusher) கொண்டு வருவார்கள்.விவசாயிகள் கரும்பு அறுவடை செய்து சாறு பிரித்து எடுப்பார்கள். இது கொப்பரை எனப்படும் பெரிய வாயகன்ற இரும்பு பாத்திரத்தில் வேகவைக்கப்படுகிறது.குறிப்பிட்ட நிலைத்தன்மையின் பின்னர் அவை தட்டுகளில் ஊற்றி வெல்லம் தயாரிக்க படுகிறது.

ஆட்டு கிடை வைப்பது அல்லது ஆட்டு புழுக்கயையை உரமாக இடுவதால் சர்க்கரை அளவு கூடும்.

கரும்பு சோகை உரிப்பதால் செதில் பூச்சி மற்றும் மாவு பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.

செங்கல் சூளைச் சாம்பலை 2-3 மாதம் ஆன கரும்புப் பயிரில் இடுவதால், இளந்தண்டு துளைப்பான் தாக்குதல் கட்டுப்படும்.

மழை கணிப்புகள்:

  • காகம் மரத்தின் மையத்தில் அதன் கூடு கட்டும் போது,மழை அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
  • காலையில் கிழக்கு திசையில் மின்னல் ஏற்பட்டால், மழை வரும்.
  • குழுவாக எறும்பு பயணம் செய்தால்,அது மழையின் வருவதன் அடையாளம்.
  • ஆடி 18இல் தேங்காய்,பழம்,உமி,பூ மற்றும் வெற்றிலை பாக்கு விவசாயிகளால் வைக்கப்பட்டு பிரார்த்தனை செய்யப்படுகிறது.இது வராத மழையும், அத்தகைய பிரார்த்தனை செய்வதன் மூலம் வரும் என்பது நம்பிக்கை.
  • கரையான் புற்று ஈரமாக இருந்தால், மழை வரும் என்பதற்கான அறிகுறியாகும்.
  • மாடு மகிழ்ச்சியாக துள்ளி குதித்தால் மழை வரும்.
  • கோழி அதன் சிறகுகளை விரித்து உலர்த்தினால், மழை வரும்.

கட்டுரையாளர்: அ.அம்ருதா, இளநிலை வேளாண்மை இறுதியாண்டு மாணவி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம். மின்னஞ்சல்: amruthaamir2000@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news