Skip to content

கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் மூலம் அபாய கட்டத்தை எட்டுவதை எவ்வாறு அறிவது…??

கொரோனா நோய் தொற்று
அறிகுறிகள் மூலம் அபாய கட்டத்தை எட்டுவதை எவ்வாறு அறிவது…??

மருத்துவரை காலம் தாழ்த்தாமல் அணுகுவதன் முக்கியத்துவம் என்ன?

Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

JOURNAL OF AMERICAN MEDICAL ASSOCIATION இல் வெளிவந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 138 கொரோனா தொற்று நோயாளிகளிடம் செய்யப்பட்ட கள ஆய்வு முடிவுகள் (Wang et al study)

மருத்துவமனையில் Serious / critical நிலையில் அனுமதிக்கப்பட்ட 138 நோயாளிகளிடம் காணப்பட்ட அறிகுறிகள் பின்வருமாறு

98.6% பேருக்கு காய்ச்சல்

69.6% பேருக்கு கடும் உடல் அசதி/ சோர்வு

59.4% பேருக்கு வறட்டு இருமல்

இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது
அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்ததில் இருந்து எத்தனை நாட்களில் அபாய அறிகுறிகள் தென்பட்டன என்பதைத்தான்

முதல் அறிகுறி ஆரம்பித்ததில் இருந்து மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கு சராசரியாக ஐந்து நாட்கள் எடுத்துக்கொண்டது

From first symptom to dysnea( shortness of breath) = 5.0 days

முதல் அறிகுறியில் இருந்து மருத்துவமனையில் சேருவதற்கு சராசரியாக ஏழு நாட்கள் ஆனது.

First symptom to hospital admission took seven days

முதல் அறிகுறி ஆரம்பமானதில் இருந்து தீவிர மூச்சுத்திணறல் நிலை ஏற்பட்டிருந்தால் அதற்கு எடுத்துக்கொண்ட சராசரி நாட்கள் – எட்டு.

From first symptom to ARDS (acute respiratory distress syndrome = 8 days ( when occurring)

இதன் மூலம் தெரிவது யாதெனில் பிரச்சனைக்குரிய அபாய அறிகுறிகளில் முக்கியமான ஒன்றான
மூச்சுத்திணறல் (Shortness of breath)
ஐந்தாம் நாள் ஆரம்பமாகியிருக்கிறது

அது ஆரம்பமானதும் அதிகமான மக்கள் ஏழாவது நாள் மருத்துவமனைகளில் அட்மிட் செய்யப்பட்டுள்ளனர்

தீவிர மூச்சுத்திணறல் பிரச்சனை யாருக்கெல்லாம் வந்ததோ அவர்களுக்கு எட்டாவது நாள் அந்த பிரச்சனை வந்திருக்கிறது

எனவே,

காய்ச்சல்
வறட்டு இருமல்
உடல் அசதி என்று சென்று கொண்டிருக்கும் அறிகுறிகள்

ஐந்தாவது நாளி்ல் மூச்சு விட லேசான சிரமம் முதல் மூச்சுத்திணறல் வரை சென்றால் உடனே அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையை நாடிட வேண்டும்.

அவ்வாறு முறையாக அரசு மருத்துவமனையை நாடினால் எட்டாவது நாள் உண்டாக இருக்கும் தீவிர மூச்சுத்திணறல் நிலையை ஆரம்பத்திலேயே இனங்கண்டு சரிசெய்து பல உயிர்களைக் காக்க முடியும்.

இதுவே டாக்டர்.வாங் மற்றும் குழுவினர் 138 மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட தீவிர சிகிச்சை தேவைப்படுகிற கொரோனா தொற்றாளர்களிடம் செய்த நிகழ் கால மருத்துவ ஆராய்ச்சியில் கிடைத்த முக்கிய தகவல்கள் ஆகும்.

முக்கிய அறிகுறிகள்

காய்ச்சல்
வறட்டு இருமல்
உடல் சோர்வு/ அசதி

முக்கிய அபாய அறிகுறி

????மூச்சு விடுவதில் சிரமம்/ ????மூச்சுத்திணறல்

ஆதாரம்
(https://jamanetwork.com/journals/jama/fullarticle/2761044…)
Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj