Skip to content

கஜா புயல் – அடுத்து செய்யவேண்டியது என்ன?

Gaja cyclone, Tamilnadu

அன்பார்ந்த விவசாயிகளே/விவசாயம் சார்ந்த ஆர்வலர்களுக்கும்
வணக்கம்

கஜா புயலால்காவிரி டெல்டா மாவட்டங்களில் நிகழ்ந்த இயற்கை பேரிடர் மிகப்பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் புயலால் ஏறக்குறைய 80% வாழ்வாதாரத்தினை இழந்து நிற்கின்றனர் டெல்டா மாவட்ட விவசாயிகள்.

நம் அக்ரிசக்தியின் சார்பில் திங்கள் (19.11.2018) அன்றே 1200 மெழுகுவர்த்திகளும், 1500 கொசுவர்த்தி சுருள், 1000 பிஸ்கட் பாக்கெட்டுகள்,  போர்வைகள், பெண்களுக்கான சில ஆடைகள் போன்றவற்றினை வழங்கிவிட்டோம்.

இந்தப் புயலால் நாம் இழந்த அதே சமயத்தில் அம்மாவட்ட விவசாயி்களை மீட்டு கொண்டு வருவதும் நம் அனைவரின் கையில்தான் உள்ளது. இழந்தவை எனப்பார்க்கும்போது கால்நடைகள், மரங்கள், பணப்பயிர்கள், வீடுகள், காட்டு விலங்ககள் என பலவற்றினை இழந்துவிட்டோம்.

ஆனால் இனிமேல் இதுபோன்ற இயற்கை சீற்றங்களால் நம்மை பாதிக்காதவாறும் அப்படியே பாதித்தாலும் என்ன செய்யவேண்டும் என்பனவற்றை நாம் இப்போதும் கண்டறிந்து அதற்கேற்றார்ப்போல் நாம் விவசாயத்தினை கட்டமைத்திட்டால் சரியாக இருக்கும்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் பெரும் சேதம் தென்னைக்குத்தான், இந்த மரங்களை வெட்டி மீண்டும் அப்புறப்படுத்தவே விவசாயிகளுக்கு பெரும் செலவாகும். இச்சூழ்நிலையில் விழுந்த தென்னை மரங்களை கொண்டு மற்றப் பகுதிகளில் நாம் என்ன செய்யமுடியும் என்று ஆலோசித்து இந்த தென்னை மரங்களை நாமே நம்முடைய பயன்பாட்டிற்கு எடுத்துக்கொண்டால் பெரும் செலவு விவசாயிகளுக்கு குறையும்….ரீப்பர் கட்டைகளாகவோ, செங்கல் சூலைக்கோ அல்லது வேறு என்ன மாதிரியான பயன்பாட்டிற்கோ அதை எடுத்து அவர்களின் செலவுகளை நாம் குறைக்கவேண்டும். அதற்கு உங்கள் உதவியும் வேண்டும்.

அதே சமயம் மறுகட்டமைப்பு செய்யும்போது கிராமத்தினைச் சுற்றி காற்றுவேலி மரங்கள் என்ன என்ன உண்டு என்பனவற்றை கண்டறிந்து அந்த காற்றுவேலி மரங்களை கிராமங்களைச் சுற்றி தோட்டத்தினைச் சுற்றி நாட்டு வைக்கவேண்டும்.  புதிய தொழில்நுட்பங்களை விவசாயத்தில் பயன்படுத்துவது குறித்தும், குறுங்காலத்தில் என்ன பயிர் செய்யலாம், நீண்ட காலத்திற்கே என்ன மர வகைகளை நடலாம் என்பது வரை நாம் செய்யவேண்டிய பணிகள் நிறையவே உண்டு
புதிய திட்டங்களின் வழியாக நம் மாநில மக்களை காப்பாற்றவேண்டியது மிக அவசியம், ஊர்கூடி செய்யவேண்டிய முயற்சி, அக்ரிசக்தி குழுவும் உங்களோடு இணைந்து களத்தில்இறங்க தயாராகவே உள்ளது.

உங்கள் எண்ணங்களை நீங்கள் எங்களுக்கு அனுப்பலாம், அல்லது உங்கள் முகநூல் கணக்கிலோ அல்லது வாட்ஸ்ஆப் வழியாகவும் பகிரலாம்.

 

அக்ரிசக்தி சில கிராமங்களை தத்தெடுத்து மீட்புப்பணிகளை செய்ய தயார் வல்லுநர் குழுக்களை கொண்டு விவாதித்துவருகிறது… விரைவில் கிராம தத்தெடுப்பு பற்றிய அறிவிப்பனை வெ ளியிடுகிறோம். எங்களோடு இணைந்து பயணிக்கவும், உங்களோடு இணைந்து பயணிக்கவும் நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம்

Image Credit : https://scroll.in

1 thought on “கஜா புயல் – அடுத்து செய்யவேண்டியது என்ன?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj