Skip to content

நெகிழியை (Plastic) அழிக்கலாம் இனி!

plastic eating

நெகிழியின் (Plastic) பயன்பாடு மிகவும் பரவலாகிவிட்ட காலகட்டமிது. எளிதில் அழிக்கவியலாத பொருளாக நெகிழி இருப்பதால், அதன் பயன்பாடு சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து எச்சரித்தும்கூட நம்மால் அதனை முற்றாகக் கைவிட இயலவில்லை.

இத்தருணத்தில், அழிக்க இயலாத நெகிழியை அழிக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்த பொருள் ஒன்று இப்புவியில் இருக்கிறது என்று தெரியவந்தால் அது நமக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்திதானே? ????

ஆம், aspergillus tubingensis எனும் பெயருடைய பூஞ்சைக் காளான்வகை, நெகிழியை அழிக்கக்கூடியது எனும் ஆச்சரியமான உண்மையை வெளியிட்டு நம்மை நெகிழச்செய்திருக்கிறார்கள், பூஞ்சைகள் குறித்துத் தொடர்ந்து ஆய்ந்துவரும் இங்கிலாந்தைச் சேர்ந்த Royal Botanic Gardens, Kew எனும் அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். ????

இந்தக் காளான்வகை முதன்முதலில் பாகிஸ்தானிலிருந்த ஒரு குப்பைமேட்டில்தான் 2017-இல் கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றை நாம் நெகிழிக் கழிவுகள்மீது வளரச் செய்யும்போது இவை சுரக்கும் நொதிகள் (enzymes), நெகிழியின் மூலக்கூறுகளுக்கிடையே இருக்கும் வேதிப் பிணைப்புகளை (chemical bonds) உடைத்து அவற்றை அழிக்க உதவுகின்றன என்பதை இவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

இதுமட்டுமன்று… pleurotus ostreatus, trametes versicolor போன்ற வெண்ணிறப் பூஞ்சை வகைகளைக் கொண்டு மண்ணில் கலந்திருக்கும் மாசுகளையும், உரங்களையும், கழிவுநீரில் கலக்கும் சாயங்களையும் நீக்கமுடியும் என்றும் தெரிவித்து நம்மை வியப்பிலாழ்த்துகின்றார்கள்.

பூஞ்சைகள் குறித்த தம் தொடர் ஆய்வுகள் மூலம் பல பயனுள்ள கண்டுபிடிப்புகளை நல்கி சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தடுத்து மனித குலம் சிறக்கப் பாடுபட்டுவரும் இந்த ஆராய்ச்சியாளர்களுக்கு நம் பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவிப்போம்! ????????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author