Skip to content

தேயிலை (Tea)

தாவரவியல் பெயர் :- கேமெல்லியா சைனென்சிஸ்

குடும்பம்: கேமில்லியேசியே

தாயகம்: மத்திய சீனா

       தேயிலை இது ஒரு பசுமைத் தாவரமாகும். இது வணிகப் பயிராகும். வெள்ளைத் தேயிலை, பச்சைத் தேயிலை, ஊலோங் தேயிலை, கறுப்புத் தேயிலை போன்ற தேயிலைகள் காணப்படுகின்றன. இதில் பக்குவப்படுத்தல் முறைகள் மாறுபடும்.

இந்தியாவில் தேயிலை 180 ஆண்டுகள் பழமையானது. மிகப்பெரிய அளவில் தேயிலை உற்பத்தி மற்றும் நுகர்வோர் நாடாக நம்நாடு திகழ்கிறது.இந்தியாவின் வணிக பயிர்களில் முக்கியமானது. அசாம் தேயிலை, டார்ஜிலிங் தேயிலை, நீலகிரி தேயிலை ஆகியவை சிவப்பு புவிக்குறியீடு எண் பெற்றுள்ளன.

பொருளாதார முக்கியத்துவம்(Economic importance):

தேயிலை பயிரின் கொழுந்து இலைகள் மற்றும் மொட்டுகள் புத்துணர்ச்சி தரும் பானம் தயாரிக்கப்பயன்படுகிறது. மேலும் இது அந்நிய செலாவணியை ஈட்டித்தருவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது.

தட்பவெப்பநிலை(climate):-

கடல் மட்டத்திலிருந்து 1000-2500 மீட்டர் வரை உயரத்தில் வளரக்கூடியது. 125-170 செ.மீ மழை பரவலாக கிடைக்கும் இடங்களில் இப்பயிர் சாகுபடியாகிறது.

மண்வளம்(Soil):-

நல்ல வடிகால் வசதியுடைய மண் ஏற்றது. மண்ணின் கார அமில நிலை 4.5-5.4 ஆக இருத்தல் வேண்டும்.

பட்டம் மற்றும் இரகம்(Season and variety):-

மேஜீன், செப்டம்பர்அக்டோபர் மாதங்கள் நடவுக்கு ஏற்றது. பாண்டியன், சுந்தரம், கோல்கொண்டா, ஜெயராம், எவர்கிரீன் அத்ரே, ப்ரூக் லேண்ட், பிஸ்.எஸ்-1,2,3,4,5 போன்ற இரகங்கள் பயிர் செய்யப்படுகிறது.

விதைக்குச்சிகள் தேர்வு (Selection of slips) :-

நோயற்ற, நல்ல மகசூல் தரக்கூடிய வீய இரகத் தாய்ச்செடியிலிருந்து மூன்று கணுக்களுடைய குச்சிகளை சாய்வாக வெட்ட வேண்டும்.

நாற்றங்கால் (Nursery):-

10 செ.மீ அகலம், 30-45 செ.மீ உயரமுள்ள பாலீத்தின் பைகளில் மணல் மற்றும் மண்ணை 1:3 என்ற விகிதத்தில் நிரப்பி குச்சிகளை நடவு செய்து நிழல் பகுதிகளில் வைக்க வேண்டும். 10-12 மாதங்களில் குச்சிகள் வேர்பிடிக்கத் தொடங்கும்.

நாற்றுக்களை கடினப்படுத்துதல் (Hardening of seedlings):-

4-6 மாதம் வயதுடைய நாற்றுகளை சூரிய வெளிச்சத்தில் 4-6 வாரங்களுக்கு வைத்து கடினப்படுத்த வேண்டும்.

நடவு (planting) :-

நடவு வயலை பயன்படுத்தி 1.2*0.75 மீ இடைவெளியில் எக்டருக்கு 10800 செடிகள் என்ற அளவில் நடவு செய்ய வேண்டும். நடவின் போது வேர்ப்பாகம் உடையாமல் இருக்க பாலித்தின் பைகளை நீள்வட்டத்தில் கிழித்து எடுக்க வேண்டும்.

உர நிர்வாகம்(Ferilizer management):-

பருவமழை ஆரம்பித்த பின்னர் தண்டுப்பகுதிக்கு அருகில் உரமிடவேண்டும்.

வருடம் ஒரு வருடத்திற்கு உர அளவு (கிலோ/எக்டர்)

முதல் வருடம்

180

270

இராண்டவது வருடம்

240

360

மூன்றாம் வருடம்

300

450

நான்காம் வருடம்

300

300

நீர்நிர்வாகம்(Water managment):-

கோடை காலங்களில் செடிகள் காயாதவாறு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.

களை நிர்வாகம் (Weed management):-

பல்லாண்டு களைகளைக் கட்டுப்படுத்த எக்டருக்கு 2 லிட்டர் கிளைபாசேட் பயன்படுத்தலாம்.

நிழல் மரம் பராமரித்தல் (Shading):-

6*6 மீ இடைவெளியில் சில்வர் ஒக் மரங்களை நட்டு நிழல் ஏற்படுத்த வேண்டும்.தேயிலை பயிர் வளர்ந்த பின்னர் 12*12 மீ இடைவெளி இருக்குமாறு விட்டு மற்ற மரங்களை அப்புறப்படுத்த வேண்டும்.

பின்செய் நேர்த்தி(After cultivation):-

காய்ந்த, நோய் தாக்கிய இலைகளை ஏப்ரல்மே மாதத்தில் கவாத்து செய்ய வேண்டும்.

அறுவடை(Harvest):-

நட்ட மூன்று ஆண்டுகளில் தேயிலை அறுவடைக்கு வரும். 10-12 நாட்கள் இடைவெளியில் வளரும் மொட்டுகளுடன் கூடிய இரண்டு இலைகளை அறுவடை செய்ய வேண்டும்.

தேயிலை விளையும் பல்வேறு நாடுகள்:

சீனா, இலங்கை, வியட்நாம், கென்யா, துருக்கி, இந்தோனேசியா, வங்காளதேசம், மாலாவி, உகண்டா, தன்சானியா, மலேசியா ஆகிய நாடுகளில் பெருமளவு உற்பத்தி செய்யப்படுகின்றன.

மருத்துவ குணங்கள்:

  1. உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யக்கூடியது.

  2. பச்சைத் தேயிலையை உட்கொள்வதால் சிலவகை புற்றுநோய், இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

  3. உடல் எடை குறைக்கவும் இது உதவுகிறது.

  4. உடல் சோர்வும், களைப்பும் நீங்கிப் புத்துணர்ச்சி பெற உதவுகிறது.

  5. தோல் புற்றுநோய் வரமால் தடுக்க உதவுகிறது.

  6. பற்கள் சொத்தையாகாமல் தடுக்கவும், பல் ஈறுகளின் வளர்ச்சிக்கும் உதவுகின்றது.

தொகுப்பு : பிரேமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news