Skip to content

தென்னை மரம் ஏற உதவும் கருவி..!

”தென்னை விவசாயிகளுக்குக் காய்கள் பறிப்பது முக்கியமான வேலை. தென்னை மரங்கள் உயரமாக வளர்ந்தால், காய் பறிக்க ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். இதனால் நஷ்டம் ஏற்படும். சில விவசாயிகள் உயரமான மரங்களை அழித்துவிட்டு, குட்டை ரகக் கன்றுகளை நடுகிறார்கள். ஆனால், உயரமான மரங்களை அறுத்து எறிய வேண்டாம். இதற்கு எளிய தீர்வு உண்டு. தென்னை மரத்துடன் இணைத்துக்கொண்டு ஏறும் கருவியை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இதன் மூலம், 60 அடி உயரம் கொண்ட மரத்தில்கூட ஐந்து நிமிடத்தில் ஏறிவிட முடியும். பெண்கள் கூட எளிதாக இக்கருவியைப் பயன்படுத்தி மரம் ஏற முடியும். அந்தளவுக்கு மிகவும் பாதுகாப்பானது, இக்கருவி. இதில் ஏறும்போது விழுந்துவிடுவோமோ என்ற பயமும் ஏற்படாது.

இரண்டு வகையான கருவிகள் உள்ளன. முதல் வகைக் கருவி ரூ.2500 –க்கும், இரண்டாம் வகை கருவி ரூ. 3000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கேரளா மாநிலம், பாலக்காட்டில் செயல்பட்டு வரும் மண்டல விவசாயத் தொழில் வளர்ச்சி கூட்டுறவுச் சங்கத்தில் (Regional Agro Industrial Development Co-Operative Of Kerala) தென்னை மரம் ஏறும் கருவியை விற்பனை செய்கிறார்கள்.

திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் தென்னை மரம் ஏறும் கருவியின் செயல்பாடுகள் பற்றிய பயிற்சி பெற்றவர்கள், தென்னை மரம் ஏறும் கருவி மூலம் தினமும் ரூ.500 வரை வருமானம் எடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புக்கு

Regional Agro Industrial Development Co Operative Of Kerala Ltd,

Palakkad. Phone : 0491 2566319

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj