Skip to content

211  புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

நீல நிற கண்களுடைய  தவளை,  கொம்புகளுள்ள தவளை, வழக்கத்திற்கு மாறாக அதிக சத்தத்தை  கொண்ட பறவை,பாம்புதலைக் கொண்ட மீன்,  டிராகுலா மீன்,  அகோரமான மூக்கினை உடைய  குரங்கு  போன்ற 211   புதிய இனங்களை   கடந்த ஆறு வருடங்களில் கிழக்கு இமயமலையில்  கண்டுபிடிக்கப்பட்டன என்று WWF ( world wildlife Foundation) கூறியுள்ளது.

உலக வாழ்விடம் தினத்தை முன்னிட்டு பூட்டானில் இமயமலையில் மறைந்துள்ளதை பற்றி அறிக்கையில் வெளியிடப்பட்டது. அப்போது, ஆசியாவின் அற்புதம்  கிழக்கு இமாலயப் பிரதேசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வட கிழக்கு இந்திய மாநிலங்களில் அருணாச்சல பிரதேசம், அசாம், சிக்கிம், வட வங்காளம், வடக்கு மியான்மர்,  நேபால் மற்றும் தெற்கு திபெத் போன்றவை  உயிரியல் ரீதியாக வளமான பகுதிகளாகும்.

2009-14ஆண்டிற்குள் 211 கண்டுபிடிப்புகள்  கண்டுபிடித்துள்ளனர். அதில், 133 தாவரங்கள், 39 முதுகெலும்பில்லாத விலங்குகள் , 26 மீன், 10 நிலநீர் வாழ்வன, 1 ஊர்வன, 1 பறவை, 1 பாலூட்டி  போன்றவை அடங்கும் என்று இந்த  அறிக்கையில்  கூறியுள்ளனர்.

1998 மற்றும் 2008 -ம் ஆண்டுகளுக்கு இடையில் கிழக்கு இமயமலை பகுதியில், குறைந்தது 354 புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அறிக்கையில் சுட்டிக்காட்டினர்.

Fauna வகை உயிரினங்கள் மிகவும் கவர்ந்திழுக்க கூடியவை . இயற்கையாக உயிரினங்கள் தோன்றுவது  உலகத்தை ஆச்சரியப்பட செய்கிறது. இயற்கை,  உலகத்தில் நிறைய ஆச்சரியங்கள் நிகழ்த்தும் என்று chief executive officer and secretary general of WWF-India and chair of the WWF Living Himalayas Initiative ரவி சிங் கூறினார்.

4 (1)

கடந்த ஆறு ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 34 புதிய உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளது.  பூமியில் ,கிழக்கு இமயமலை பகுதிதான் உயிரினங்களுக்கு ஏற்ற இடமாக இருக்கிறது என்று அறிக்கையில் வெளியிடப்பட்டது.

கிழக்கு இமயமலை பிரதேசங்களில்,  200 சுற்றுப்புறப்பிரதேசம் அமைந்துள்ளது. இந்த இடத்தில்   10,000 க்கும் மேற்பட்ட தாவர இனங்கள், 300 பாலூட்டி இனங்கள், 977 பறவை இனங்கள், 176 ஊர்வன, 105 நீர்நில வாழ்வன மற்றும் 269 நன்னீர் மீன்  போன்றவற்றுக்கு இந்த பகுதி தாயகமாக இருந்து வருகிறது.

மக்கள் தொகை வளர்ச்சி, காடுகளை அழித்தல், சுற்றுச்சூழல் மாசடைதல் போன்றவற்றை அந்த பகுதியில் தடுக்கபட வேண்டும் என்று அறிக்கையில் கூறினர். இதற்காக அரசாங்கம் ஒருமுக்கியமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் நிலையான வளர்ச்சி மற்றும் உயிரினங்கள் பாதுகாக்கப்படும் என்று இந்த அறிக்கையில் வெளியிட்டனர்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

 

1 thought on “211  புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj